Latestமலேசியா

உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை; அழுகுரல் கேட்டு மீட்ட சரவாக் போலீஸார்

காப்பிட், அக்டோபர்-29,சரவாக், காப்பிட்டில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டொன்றின் அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸார், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த அதனை உயிருடன் மீட்டதாகக் காப்பிட் மாவட்ட போலீஸ் கூறியது.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குழந்தை, மேல் சிகிச்சைக்காகச் சிபூ மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பெண் சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், அவரிடம் இன்னும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!