Latestஉலகம்விளையாட்டு

உலகக் கிண்ணம் 2026: முன்னாள் கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காமும் பாடகி ஷகிராவும் அமோக வருமானம் ஈட்டினர்

நியூயார்க், ஜூலை-22-அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் ஸ்பெயின் வாகை சூடியது. இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினாவை 1-0க்கு என வீழ்த்தி ஸ்பெயின் இரண்டாவது முறையாக அக்கிண்ணத்தை வென்று சாதனைப் படைத்தது.

இது ஒருபுறம் இருக்க அப்பிரசித்தி போட்டியின் மூலம் பல பிரபலமான நட்சத்திரங்கள் பெரும் தொகையிலான வருமானம் ஈட்டியது கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் David Beckham அப்போட்டியின் வாயிலாக கொள்ளை லாபம் பெற்றுள்ளார். 51 வயதான அந்த முன்னாள் கேப்டன், உலகக் கிண்ணப் போட்டி நெடுகிலும் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு விளம்பரங்களின் வழி சுமார் 104 மில்லியன் ரிங்கிட் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

Bank of America, Lay’s Snacks, McDonalds, Adidas போன்ற பல முன்னணி முத்திரைகளின் முகமாக விளங்கிய Beckham, கிட்டத்தட்ட ஒவ்வொரு விளம்பர இடைவேளையின் போதும் தோன்றினார்.

Inter Miami கால்பந்து கிளப்பின் இணை உரிமையாளரான இவரது மனைவி Victoria Beckhamமுடன் சேர்த்து Beckhamமின் சொத்து மதிப்பு தற்போது 6.8 பில்லியன் ரிங்கிட் எனக் கூறப்படுகிறது.

இவ்வேளையில் உலகக் கிண்ணப் போட்டியின் போது பிரபல ஆங்கிலப் பாடகி Shakiraவின் புகழ் பெற்ற பாடல்களை இணையத்தின் கேட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்ததால், அவர் ஏறக்குறைய 82 மில்லியன் ரிங்கிட் வரையிலான பெரும் தொகையை ஈட்டியுள்ளார் என கணிக்கப்படுகிறது.

உலகக் கிண்ணக் கால்பந்துக்கும் Shakiraவுக்கும் நீண்டகால வலுவான பிணைப்பு இருப்பதால் அப்போட்டி நடைபெறும் போதெல்லாம், அவரது இசை மற்றும் ‘பிராண்ட்’ மீதான ஆர்வம் மீண்டும் அதிகரிக்கிறது.

தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் கூட அவர் பாடியிருந்தார். Shakira பங்கேற்ற
நான்காவது உலகக் கிண்ணக் போட்டி அதுவாகும்.

உலகக் கிண்ணமானது உலகின் மிகப் பெரிய கால்பந்துப் போட்டியாக மட்டுமல்லாமல், உலகளவில் மிகவும் மதிப்புமிக்க விளம்பரத் தளங்களில் ஒன்றாகவும் திகழ்வதாக பிராண்டிங் மற்றும் கலாச்சார வல்லுனர் Nick Ede கூறுகிறார்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் விளம்பரங்களைப் பார்ப்பார்கள் என்பதால், விளம்பர இடைவேளைகளின் போது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய பிரபலங்களை ஒப்பந்தம் செய்ய நிறுவனங்கள் பல கோடி பணத்தைச் செலவிடத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!