எண்ணெய் நிலையத்தில் கைப்பை பறிப்பு; பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே பழியைப் போட்ட வலைத்தளவாசிகள்

பூச்சோங், மார்ச்-4,
சிலாங்கூர், பூச்சோங் ஜெயாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் காருக்கு எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்த போது, பெண்ணின் கைப்பையை மோட்டார் சைக்கிளோட்டி ஒருவன் பறித்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
திருடன் கைப்பையை இழுத்த வேகத்தில் கீழே தடுமாறி விழுந்த அப்பெண்ணுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று பார்த்தால், சமூக வலைத்தளங்களில் ஏச்சும் பேச்சும் கிடைத்ததே மிச்சம்.
ஆம், “வெளியில் வரும் போது மற்றவர் கண்ணில் படும் அளவுக்கு எதற்காக கைப்பையை தோளில் தொங்க விட வேண்டும்? இது அப்பெண்ணின் தவறே” என ஏராளமான வலைத்தளவாசிகள் கருத்துப் பதிவிடத் தொடங்கி விட்டனர்.
அப்பெண்ணும், தன்னைத் தற்காத்து பதில் பதிவிட்ட நிலையில், சமூக ஊடகங்களில் விவாதம் பரபரப்படைந்துள்ளது.
குற்றம் புரிந்தவனை விட்டு விட்டு பாதிக்கப்பட்ட பெண் மீதே பழி சுமத்தும் இந்த கலாச்சாரம் முகம் சுளிக்க வைத்துள்ளது.



