Latestமலேசியா

கடந்த ஆண்டு 439 தமிழ்ப் பள்ளிகளுக்கு RM24.8 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது – கல்வி அமைச்சு

கோலாலம்பூர், பிப் 20 – நாட்டிலுள்ள அரசு உதவி பெற்ற 274 தமிழ்ப்பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு 17.8 மில்லியன் ரிங்கிட்டும் அரசு பிரிவைச் சேர்ந்த 165 தமிழ்ப் பள்ளிகளுக்கு 7 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது.

இதனை கல்வி அமைச்சு, தொடர்பு அமைச்சிலுள்ள இந்திய சமூகத்திற்கான ஊடக பிரிவிடம் தெரிவித்துள்ளது.

அனைத்து தமிழ்ப் பள்ளிகளும் சிறந்த கல்வி வசதியை பெறுவதை கல்வி அமைச்சு எப்போதும் உறுதிப்படுத்தி வருகிறது என்பதை கடந்த 2023 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டில் அரசு உதவி பெற்ற பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் பராமரிப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகளே இதற்கு ஆதாரமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!