Latestமலேசியா

கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த RM50,000 ரொக்கம் தீயில் சாம்பலானது

கோத்தா பாரு, ஏப்ரல்-5-கிளந்தான், கோத்தா பாருவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM50,000 ரொக்கம் முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம், உரிமையாளருக்கு கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அலமாரியிலும் மெத்தைக்கு அடியிலும் ‘பாதுகாப்பாக’ அப்பணத்தை வைத்திருந்தேன்; ஆனால் இன்று அவை சாம்பலாகி விட்டன” என 40 வயது Syawal Anuar Ariffin வேதனையுடன் கூறினார்.

சமையல் எரிவாயுக் கலன் விற்பனையாளரான அவ்வாடவர், கொள்முதலுக்குச் செலுத்துவதற்காக வைத்திருந்த பணமே அதுவெனக் கூறினார்.

சம்பவத்தின் போது, மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் தாம் வெளியில் சென்றிருந்ததாகவும், உறவினர் தகவல் சொன்ன பிறகே ஓடி வந்ததாகவும் அவர் கூறினார்.

தீயில், 30 காலி எரிவாயு தோம்புகளும் வெடித்ததில், Syawal-லின் குடும்பச் சொத்தான வீடும் முழுமையாக எரிந்துபோனது.

அத்தீயில் அவர் உட்பட மொத்தம் 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

5 வீடுகள் முழுவதுமாக எரிந்துபோன நிலையில், மற்றவை 10 விழுக்காடு சேதமடைந்தன.

உயிர் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!