
புத்ராஜெயா, அக்டோபர்-27,
6 ஆண்டுகளுக்கு முன்பு தனது இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்த வழக்கில், கூட்டரசு நீதிமன்றத்தில் இறுதி மேல்முறையீட்டிலும் தோல்வியடைந்த முன்னாள் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங், அத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருகிறார்.
அவர் தற்போது 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்; 2 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனது மேல்முறையீட்டை வேறு உச்ச நீதிமன்றங்களில் விசாரிக்கக் கோரி அவர் விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.
தனது தண்டனையை மறுஉறுதிச் செய்த அக்டோபர் 1 தீர்ப்பு, நியாயமற்ற நடைமுறையால் கறைபட்டுள்ளதாக போல் யோங் தனது மனுவில் கூறிக் கொண்டார்.
2019, ஜூலை 7-ஆம் தேதி இரவு 8.15 மணி முதல் 9.15 மணி வரை ஈப்போவில் உள்ள தனது வீட்டில் 23 வயது பெண்ணை கற்பழித்த வழக்கில், 2022-ஆம் உயர் நீதிமன்றத்தால் யோங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இவ்வழக்கு மலேசியா மட்டுமின்றி இந்தோனேசியாவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.



