Latestமலேசியா

கழிவுநீர் வடிகால் குழியில் விழுந்து மாணவர் மரணம் -9 பேரிடம் போலீசார் வாக்குமூலம்

 

சிரம்பான், செப்- 29,

இரண்டு நாட்களுக்கு முன்பு, நீலாய் , Lenggengகில் உள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் கழிவுநீர் குழியில் விழுந்த சோகம் தொடர்பாக இதுவரை ஒன்பது நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

புகார்தாரர், ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களான அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமட் ( Alzafny Ahmad ) தெரிவித்தார்.

பொதுப்பணித் துறை, Indah Water Konsortium , SPAN எனப்படும் தேசிய நீர் சேவைகள் ஆணையம் ஆகிய மேலும் நான்கு தரப்புக்களிடம் இன்று மேலும் நான்கு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

சிறார் சட்டம் 2001இன் பிரிவு 31(1)(a)யின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை நடவடிக்கையை சீர்குலைக்கும் ஆருடங்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக Alzafny வலியுறுத்தினார்.

சம்பவம் நடந்த பள்ளியின் இடத்தில் CCTV ரகசிய கண்காணிப்பு கேமாரா எதுவும் இல்லை.

அந்த கழிவு நீர் வடிகாலில் கால்வாயில் நேற்று விழுந்த மூன்றாம் வகுப்பு மாணவன் Abdul Fatah Khairol Rizal இறந்தான் .

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் முழுப் பொறுப்பை தங்கள் தரப்பு எடுத்துக்கொண்டிருப்பாக இதற்கு முன் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் ( Fadhlina Sidek ) கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!