காஜாங், செப்டம்பர் -25 – சிலாங்கூர் காஜாங் சுங்கை பாலாக் டோல் சாவடியில் roro ரக லாரியொன்று காங்கிரீட் தடுப்புச் சுவரையும் டிரேய்லர் லாரியையும் மோதிய சம்பவத்திற்கு, பிரேக் செயலிழந்ததே காரணமாகும்.
காஜாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் (Naazron Abdul Yusof) அதனை உறுதிப்படுத்தினார்.
டெங்கிலில் இருந்து Batu 18 செல்லும் வழியில், டோல் சாவடியை அடைந்த போது அந்த roro லாரியில் பிரேக் பிடிக்கவில்லை.
இதனால் லாரி ஓட்டுநர் இடது பக்கமாக லாரியை செலுத்த முயன்ற போது, அது காங்கிரீட் தடுப்புச் சுவரில் மோதியது.
பக்கத்து பாதையில் டோல் கட்டணம் செலுத்திக் கொண்டிருந்த டிரேய்லர் லாரியின் பின் பகுதியையும் அது மோதியது.
எனினும் இரு ஓட்டுநர்களுக்கும் அதில் காயமேதும் ஏற்படவில்லை.
வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் பேரில் roro லாரி ஓட்டுநர் விசாரிக்கப்படுகிறார்.