Latestஉலகம்சினிமா

‘காட்ஸில்லா’ நடிகை கேய்லி ஹாட்டில் கார் விபத்தில் பலி

வாஷிங்டன், ஜூலை 22 – Godzilla v Kong மற்றும் Godzilla X Kong: The New Empire திரைப்படங்களில் ‘ஜியா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 19 வயதான அமெரிக்க நடிகை கேய்லி ஹாட்டில் (Kaylee Hottle), மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை, அவர் பயணித்த கார் இருவழிச் சாலையில் இருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர். ஆரம்ப விசாரணையில், அதிவேகமாக கார் ஓட்டியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிறவியிலிருந்தே காது கேளாதவரான கேய்லி, விபத்துக்குப் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரை ஓட்டிய இளைஞர் காயமடைந்த நிலையில் அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

2024-ஆம் ஆண்டு சிறந்த இளம் நடிகருக்கான சாடர்ன் (Saturn) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த கேய்லியின் மறைவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!