
கோலாலம்பூர், ஏப்ரல்-11-கிளானா ஜெயா வழித்தடத்திற்கான LRT இரயிலில் ஒரு பெண் பயணியின் பாவாடைக்குக் கீழ் வீடியோ எடுத்ததாகக் கூறி சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
அந்நபர் முன்னதாக தனது கைப்பேசியை சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்து, பெண் பயணியின் பாவாடைக்குக் கீழ் பதிவுச் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதனை அவர் கவனிக்கவில்லை; ஆனால் அருகிலிருந்த மற்றொரு பெண் கவனித்து, உடனடியாக அவ்வாடவரை எதிர்த்து தைரியமாக கேள்வி எழுப்பினார்.
வீடியோவை உடனடியாக அழிக்குமாறும் அவர் வாக்குவாதம் செய்வது வீடியோவில் தெரிகிறது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் அப்பெண்ணின் தைரியத்தை பாராட்டியுள்ளனர்.
இதனிடையே முக்கிய சாட்சியான அப்பெண் ஏப்ரல் 8-ஆம் தேதி கொடுத்த போலீஸ் புகாரை அடுத்து, 24 மணி நேரங்களில் சந்தேக நபர் கைதானார்.
அவர் 19 வயது வெளிநாட்டு ஆடவர் என்பதை RapidKL நிறுவனம் உறுதிப்படுத்தியது.
விசாரணைக்காக, அவர் உடனடியாக ஸ்ரீ பெட்டாலிங் போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டார்.
புத்ராஜெயா வழித்தடத்திற்கான Kuchai MRT இரயிலில் ஏற்கனவே இதே போன்ற பாலியல் தொல்லையில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.



