
கிள்ளான், ஏப்ரல்-9-கிள்ளான், ரந்தாவ் பாஞ்சாங்கில், ஒரு வீட்டின் வெளியே சோஃபாவில் வைக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் குழந்தை உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் நேற்று காலை பொது மக்கள் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக, வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
குழந்தையின் உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை.
பின்னர், மேற்கொண்டு பரிசோதிக்க ஏதுவாக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக விஜயராவ் சொன்னார்.
போலீஸார் விசாரணையைத் தொடங்கி, குழந்தையை கைவிட்டவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.
தகவல் தெரிந்தோர் போலீஸை தொடர்புக் கொள்ளலாம்.



