Latestமலேசியா

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல்மயமாக்கல்; உள்நாட்டு வருவாய் வாரியமான HASiL நடத்திய பிரம்மாண்ட விழா

கோலாலாம்பூர், ஏப்ரல்-21-PMKS எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தித் திறன், புத்தாக்கம் மற்றும் சந்தை விரிவாக்கங்களை மேம்படுத்தும் நோக்கில், ‘PMKS மற்றும் e-Invois’ விழாவை உள்நாட்டு வருவாய் வாரியமான HASiL கோலாலம்பூரில் நடத்துகிறது.

ஏப்ரல் 20 தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வை நிதித்துறை துணை அமைச்சர் லியூ சின் தோங் (Liew Chin Tong) அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

e-Invois முறையைச் செயல்படுத்துவதில் சிறு வணிகர்களுக்கு உள்ள சவால்களைக் களைவதே இந்த கார்னிவலின் முக்கிய நோக்கமாகும்.

20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த ஒருங்கிணந்த தளம், சிறு வணிகர்களுக்குத் தேவையான நிதி உதவி மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது.

இதன் மூலம் வணிகங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறுவது எளிதாக்கப்படும் என HASiL தலைமைச் செயல் அதிகாரி டத்தோ Dr அபு தாரிக் ஜமாலுடின் (Abu Tariq Jamaluddin) தெரிவித்தார்.

நாடு தழுவிய அளவில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

வரி செலுத்தும் முறையை எளிமையாக்குவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வலுப்படுத்துவதே HASiL-லின் இலக்காகும்.

HASiL-ன் 30-ஆம் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த கார்னிவல், வணிகர்களுக்குப் புதிய தொழில்நுட்பப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!