
செப்பாங், மார்ச்-25-குற்றச்செயல் துடைத்தொழிப்பில் பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
பொது மக்கள் ஒத்துழைத்தால் குற்றச்செயல்களை மேலும் ஆக்ககரமாக முறியடிக்க முடியும் என, செப்பாங் போலீஸ் தலைவர் ACP Norhizam Bahaman நம்பிக்கைத் தெரிவித்தார்.
219-ஆவது போலீஸ் தினத்தை ஒட்டி இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கொண்டாட்டத்தில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
அந்நிகழ்வில், நற்சேவைக்காக போலீஸ் அதிகாரிகளுக்கு
சிறப்பு சான்றிதழ்களும் பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டன.
செப்பாங் போலீஸுக்கு பல வகையிலும் உதவியப் பிரமுகர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.



