
கேமரன் மலை , பிப் 19 – பஹாங்கில், நேற்று ஜாசர் மலையேறியபோது ( Gunung Jasar ) காயம் அடைந்த நெதர்லாந்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் மலையேறியை தேடும் மற்றும் மீட்புக் குழுவினர் கண்டுப்பிடித்ததோடு அவருக்கு முன்னோடி சிகிச்சையை வழங்கினர்.
மீட்பு பணிக்கு நடவடிக்கை அதிகாரி Wan Muhammad Faiz Wan Asri மற்றும் கேமரன் மலை தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் எட்டு உறுப்பினர்களும் காவல்துறையினரும் தலைமையேற்றதாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பொது உறவு அதிகாரி சுட்பட்லி ஸாக்கரியா( Zulfadli Zakaria) தெரிவித்தார்.
மூன்று மணி நேரத்திற்குப் பின் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தேடும் மற்றும் மீட்பு குழுவினர் சென்றடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் stretcherரை பயன்படுத்தி கீழே கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு Lower Splint சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சிசிக்சை பெறுவதற்காக சுகாதார அமைச்சிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட மலையேறும் நடவடிக்கையில ஈடுபடுவோர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு ஏற்ப மிகவும் கவனமாகவும் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைக்கும் தயாராய் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டனர்.