
கூலாய், ஜூலை-11 – ஜோகூர், கூலாய், ஜாலான் பெரிண்டாஸ்திரியான் சீனாய் அம்பாட்டில் நேற்று காலை தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்ததில், ஓட்டுநரும் 22 பயணிகளும் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக தெமங்கோங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பயணிகள் 22 பேரும் 25 முதல் 30 வயதிலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.
38 வயது உள்ளூர் ஓட்டுநர் ஓட்டிச் சென்ற அப்பேருந்து, சாலை சந்திப்பில் இடதுபுறமாக வளையும் போது கட்டுப்பாட்டை இழந்து, வலப்புற கால்வாயில் கவிழ்ந்தது.
ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என உறுதிச் செய்யப்பட்டது.
விபத்து குறித்து கூலாய் போலீஸ் விசாரித்து வருகிறது.