
கெடாவில் கோழிக்கூண்டில் சத்தம்;3 மீட்டர் நீள நாகப்பாம்பு கண்டுபிடிப்பு
பெண்டாங், பிப்ரவரி-16,
கெடா, பெண்டாங்கில் கோழிக்கூண்டில் இருந்து வந்த சத்தத்தால் சந்தேகத்தில் போய்ப் பார்த்த கிராம மக்கள், அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
கூண்டினுள் 3 மீட்டர் நீளத்திற்கு ஒரு நாகப்பாம்பு படுத்திருந்ததே அதற்குக் காரணம்.
உடனடியாக பொது தற்காப்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் விரைந்து வந்து, பாம்பை பாதுகாப்பாக பிடித்து, கிராம மக்களுக்கும் கோழிகளுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் தடுத்தனர்.
பிடிக்கப்பட்ட _King Cobra_ பின்னர் கிராமத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.
கடும் வெப்பம் காரணமாக பாம்புகள் தங்கள் இயற்கை வாழ்விடங்களை விட்டு, வீடுகள், பிராணிகளின் கூண்டுகள் போன்ற இடங்களில் புகுந்து விடுகின்றன.
எனவே, பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பாம்புகள் காணப்பட்டால் உடனடியாக தகவல் தர வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.



