Latest

கெடாவில் மாணவனின் பொய் நாடகத்தை அம்பலப்படுத்திய போலீஸ்; மாணவன் கடத்தப்பட்டது உண்மையல்ல

nitthiya news 1

கெடா, ஜூலை 15 – கெடா குவாலா நெராங் பகுதியில் 14 வயது பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் பொய்யானது என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பள்ளி முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட மாணவன் தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்துள்ளான். அங்கிருந்த மாணவி அவனைக் கண்டதால், பதற்றம் அடைந்த மாணவன் அங்கிருந்து ஓடி, வழியில் சென்ற மோட்டார் சைக்கிளில் ஏறி வேறு இடத்திற்குச் சென்றுள்ளான்.

பின்னர், ஒரு வீட்டின் முன் இறங்கிய மாணவனை சந்தேகித்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின், கடத்தப்பட்டதாக மாணவன் அளித்த புகார் பொய்யானது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், போலீஸ் விசாரணையில் கடத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. பொய்யான போலீஸ் புகார் அளித்ததற்காக மாணவன் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!