Latestமலேசியா

கெந்திங் கெசினோ சூதாட்ட மையத்தில் இரகளை, RM85,000 சேதம்; பாதுகாப்பு அதிகாரியின் 2 பற்களை உடைத்த வெளிநாட்டவர் கைது

பெந்தோங், அக்டோபர்-29,கெந்திங் மலையில் உள்ள கெசினோ சூதாட்ட மையத்தில் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கி, 85,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைச் சேதப்படுத்தியதாக 34 வயது வெளிநாட்டு ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் Sky Casino சூதாட்ட விடுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், சந்தேக நபர் மதுபோதையில் இரகளையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

தம்மைக் கட்டுப்படுத்த முயன்ற 32 வயது உதவி போலீஸ் அதிகாரியின் வாயில் அவ்வாடவர் குத்தியதில், அவரது இரண்டு பற்கள் உடைந்தன.

போதாக்குறைக்கு, 3 சூதாட்ட இயந்திரங்களின் திரைகளில் தலையால் மோதி சேதப்படுத்தியதுடன், இரண்டு நாற்காலிகளையும் அவர் உடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் நெற்றியில் காயமடைந்த சந்தேக நபருக்கு 6 தையல்கள் போடப்பட்டன.

வேண்டுமென்றே மற்றவருக்குக் காயமேற்படுத்தியது, பொருட்களைச் சேதப்படுத்தியது ஆகியக் குற்றங்களுக்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ் அவ்வாடவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!