
கோலாலம்பூர், மார்ச்-1-கோலாலம்பூர் கெப்போங்கில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர குடிநுழைவுத் துறை சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
இந்த ‘Ops Gegar’ நடவடிக்கை, பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு 11 மணிக்கு இரண்டு சொகுசு பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்டது.
மொத்தம் 224 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 53 பேர் உள்ளூர்வாசிகள்; 171 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
அவர்களில் 14 ஆண்கள் உட்பட 107 பேர் கைதாகினர்.
அனைவரும் தாய்லாந்து, வியட்நாம், வங்காளதேசம், லாவோஸ் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஒருவரிடமும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை என்பதால் கைதாகி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் பலனாக இக்கைது சாத்தியமானதாக குடிநுழைவுத் துறை கூறியது.



