Latestமலேசியா

கைது நடவடிக்கையின்போது காயமடைந்த 2 போலீஸார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

லாருட், ஜூன் 26 – போதைப்பொருளுக்கு அடிமையான ஆடவனால் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த இரண்டு போலீஸார், இன்று தைப்பிங் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செலாமா மாவட்ட போதைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவைச் (BSJN) சார்ந்த இரு போலீசார், கடந்த செவ்வாய்க்கிழமை கம்போங் சுங்கை ஜெர்னிஹ் (Kampung Sungai Jernih) பகுதியில் சந்தேக ஆடவனைக் கைது செய்ய முயன்றபோது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தில் ஒரு போலீசாரின் முகத்தில் பலத்த காயமடைந்ததுடன், மற்றொரு போலீசாரின் தலை, கை மற்றும் வயிற்று பகுதி காயமடைந்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஆடவனை கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என்று செலாமா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரிதெண்டன் ரம்சி மாமுடின் (Superintendan Ramzi Mahmudin) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!