
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – ஆடவர் ஒருவர், தன்னை சதிகாரர்கள் சிலர் கொல்ல முயற்சிப்பதாகவும், அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவி தேவை என்றும் ஆடவர் ஒருவர் விடுத்த வேண்டுகோள் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
அந்நபர் எல்ஆர்டி ரயிலில் நுழைந்து தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கும் கும்பலைத் தடுப்பதற்கு அருகிலுள்ளவர்களிடம் உதவி கேட்கும் காட்சி அக்காணொளியில் காண முடிகின்றது.
கொலை முயற்சிக்குப் பின்னால் தனது சொந்த சகோதரர் இருப்பதாகவும், அக்கும்பல் தன்னைத் துரத்திச் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த நபர் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்றும், அந்தப் புகாரை அவர் காண்பிப்பதும் பதிவிலிருந்து அறிய முடிகின்றது.
அதே நேரத்தில் தன்னைப் காணொளியில் பதிவு செய்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவர்கள் எடுத்த வீடியோக்களை வைரலாக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, இப்பதிவிற்கு நெட்டிசன்கள் அனுதாப கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் இப்பதிவின் வழி அவர் கொலை முயற்சியிலிருந்து நிரந்தரமாக தப்ப முடியுமென்ற நம்பிக்கை மிக்க கருத்துக்களும் வந்த வண்ணமாக உள்ளன.