Latestமலேசியா

கோத்தா திங்கி அருகே 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 2 முதியவர்கள் பலி; குழந்தை உட்பட 9 பே காயம்

கோத்தா திங்கி, ஜூன்-29- ஜோகூர் கோத்தா திங்கியில் ஃபெல்டா பாசாக் அருகே டெசாரு – கோத்தா திங்கி சாலையில் 5 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 2 முதியவர்கள் பலியாயினர்.

7 மாதக் குழந்தை உட்பட 9 பேர் அதில் காயமடைந்தனர்.சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மேல் ஒரு Hino லாரி, Toyota Corolla, Perodua Axia, Proton Saga, Perodua Bezza ஆகிய 4 கார்கள் ஆகியவை அவ்விபத்தில் சிக்கின.

உயிரிழந்தவர்கள் Toyota Corolla-விலிருந்த 69, 74 வயது ஆடவர்கள் ஆவர்; காருக்குள் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

குழந்தை உட்பட ஏனைய 9 பேரும் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகினர்.

அவர்கள், தீயணைப்பு வண்டி வருவதற்குள், வாகனங்களிலிருந்து வெளியேறி தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டனர்.சம்பவ இடத்தில் மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு சிகிச்சையளித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!