
கோலாலம்பூரில் 16 லட்சம் பேரின் வாழ்வை நாசப்படுத்தக்கூடிய 3 டன் போதைப் பொருள் பறிமுதல்
கோலாலம்பூர், பிப்ரவரி-14,
மலேசிய போலீஸார் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, 3 டன் மெத்தாம்பெட்டமின் (methamphetamine) உட்பட பல்வேறு போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சபா மற்றும் சிலாங்கூரில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், கெட்டமின் (katamine), எக்ஸ்டசி (ecstasy) மாத்திரைகள், கொக்கேய்ன் (cocaine) கலந்த வேப் திரவம், 5 எரிமின் (erimin) மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கடல் வழியாக போதைப்பொருட்களை கப்பல் கொள்கலன்களில் மறைத்து அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிள்ளான் துறைமுகத்தில் மட்டும் 255 கிலோ மெத் கைப்பற்றப்பட்டது.
இந்த போதைப்பொருட்கள் 1.6 மில்லியன் மக்களின் வாழ்க்கையை அழித்திருக்கக் கூடும் என, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ காலிட் இஸ்மாயில் கூறினார்.
23 முதல் 45 வயதுட்பட்ட 8 சந்தேக நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.



