Latestமலேசியா

கோலாலாம்பூரில் 800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் குடிநுழைவு இலாகா அதிரடிச் சோதனை

கோலாலாம்பூர், மார்ச்-10-புத்ராஜெயா குடிநுழைவு இலாகா இன்று கோலாலம்பூரில் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 823 அந்நிய நாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மஸ்ஜித் ஜாமேக், ஜாலான் சீலாங், லெபோ புடு ஆகிய இடங்களில் இச்சோதனைகள் நடத்தப்பட்டன.

எனினும், பரிசோதிக்கப்பட்ட அனைவரும் முறையான ஆவணங்களை வைத்திருந்ததாக,
குடிநுழைவு இலாகாவின் துணைத் தலைமை இயக்குநர் டத்தோ Lokman Effendi bin Ramli இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எனவே யாரும் கைதுச் செய்யப்படவில்லை; என்றாலும் சிலருக்கு எச்சரிக்கை விடப்பட்டு, அபராத்தைச் செலுத்தி தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

கள்ளக் குடியேறிகளைத் துடைத் தொழிக்கவும், மாநகரின் தோற்றத்தைப் பேணவும இதுபோன்ற அதிரடிச் சோதனை நடவடிக்கைகள் தொடரும் என டத்தோ Lokman கூறினார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!