
கோத்தா கினபாலு, செப்டம்பர் 12 – சபாவில் வெள்ளம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 லிருந்து 409 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 22 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 14 கிராமங்கள் பெனம்பாங்கிலும் (Penampang), எட்டு கிராமங்கள் பியூஃபோர்டிலும் (Beaufort) உள்ளன, என்று அறியப்படுகின்றது.
நேற்று இரவு பெனம்பாங்கின் கம்போங் சாரபுங் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய 97 வயது மதிக்கத்தக்க முதியவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அப்பாதை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்டிருந்ததால் மீட்புக் குழுவினர் சுமார் மூன்று கிலோமீட்டர் நடைபயணம் செய்தே சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் போலீசாரும், பிற அரசு அமைப்புகளும், கிராம மக்கள் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.