Latestமலேசியா

சாலையின் எதிர்புறத்தில் வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது

கோலாலம்பூர், பிப்ரவரி 27 – கூட்டரசு நெடுஞ்சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மாலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், சந்தேகநபர் ஓட்டிய வாகனம், பெரொடுவா மைவி காருடன் மோதியது.

மைவி காரை ஓட்டிய உள்ளூர் பெண் ஓட்டுநர் காயமின்றி தப்பினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலை விதிகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் போலீசார் வலியுறுத்தியதுடன், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!