
சிரம்பான், ஜனவரி-27 – சிரம்பான், Taman Seri Binjai-யில் உள்ள வீட்டொன்றில் holo சூதாட்டத்தில் மூழ்கியிருந்த 14 ஆடவர்ககைப் போலீஸார் கைதுச் செய்தனர்.
சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வாக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 34 முதல் 62 வயதிலான அவர்கள் கைதாகினர்.
Holo சூதாட்டம் வரையப்பட்டிருந்த மேசை,2 தாயக்கட்டைகள், ஒரு பீங்கான் மங்கு, ஒரு பீங்கான் கிண்ணம், 12 நாற்காலிகள் 19,168 ரிங்கிட் ரொக்கம் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபர்கள் விசாரணைக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் திறந்தவெளியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 1953-ஆம் ஆண்டு சூதாட்ட சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 5,000 ரிங்கிட் அபராதமும் 6 மாத சிறையும் விதிக்கப்படலாம்.