
சிலாங்கூரில் பன்றிப் பண்ணைகளுக்கு இனி உரிமம் இல்லை – அமிருடின்
ஷா அலாம், பிப்ரவரி-12,
சிலாங்கூர் அரசாங்கம் ஜனவரி மாதத்தில் பன்றி வளர்ப்பு உரிமங்கள் வழங்குவதை நிறுத்தியதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதோடு தஞ்சோங் செப்பாட்டில் ( Tanjung Sepat ) உள்ள பன்றி பண்ணைகளை காலி செய்வதிலும் மாநில அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என சிலாங்கூர் மந்திரிபெசார் அமிருடின் ஷாரி (Amirudin Shari ) தெரிவித்தார்.
மாநிலத்தில் பன்றி வளர்ப்பை நிறுத்துமாறு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா
(Sharafuddin Idris Shah ) நேற்று விடுத்த அழைப்பை மாநில அரசு கவனத்தில் கொண்டதாகவும், தற்போது சிலாங்கூரில் இயங்கும் அனைத்து பன்றி பண்ணைகளும் படிப்படியாக மூடப்படும் என்றும் அமிருடின் ஷாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மாநிலத்தின் பன்றி வளர்ப்புத் தொழிலைஉலு சிலாங்கூர் புக்கிட் தாகரில் ஒரு முகப்படுத்துவதற்கு இதற்கு முன் சிலாங்கூர் திட்டமிட்டிருந்தது. எனினும் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயக் குழுவுக்கான தலைவர் இஷாம் ஹாஷிம் ( Izham Hashim ) இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, சிலாங்கூர் ஆட்சிக் குழு கடந்த மாதம் அந்தத் திட்டங்களை ரத்து செய்தது.
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் மாநிலத்தில் பன்றி வளர்ப்பை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று நேற்று சிலங்கூர் சுல்தான் அழைப்பு விடுத்தார்,



