Latestமலேசியா

சிலாங்கூர் சுல்தானுக்கு அவமதிப்பு: ‘Huayan’ முகநூல் பக்க நிர்வாகியிடம் MCMC விசாரணை; கைப்பேசி பறிமுதல்

சைபர்ஜெயா, ஏப்ரல்-28-சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.

​’Huayan The Pureland Learning Centre’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் நிர்வாகி இது குறித்து விளக்கம் அளிக்க நேரில் அழைக்கப்பட்டார்.

​அவ்வாடவரிடம் சைபர்ஜெயாவில் உள்ள MCMC வாக்குமூலம் பெறப்பட்டது.

விசாரணைக்காக அவரது கைப்பேசி மற்றும் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

​சமூக வலைத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான 1998-ஆம் ஆண்டு MCMC சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதமும் ஈராண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வேளையில், போலீஸ் தனியாக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ​மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான உணர்ச்சிகரமான கருத்துக்களைப் பகிர வேண்டாம் என்று பொது மக்களை ஆணையம் எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!