Latestமலேசியா

பண்டார் புஞ்சாக் ஆலாமில் மலைப்பகுதி தீப்பிடித்து எரிந்த சம்பவம்: 2 பள்ளிகளுக்கு தற்காலிக மூடல் உத்தரவு

சிலாங்கூர், ஜூலை 27 – சிலாங்கூர், பண்டார் புஞ்சாக் ஆலாமில் சுமார் நான்கு ஹெக்டேர் பரப்பளவிலான மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள புஞ்சாக் ஆலாம் தேசிய பள்ளி 2 மற்றும் SRA புஞ்சாக் ஆலாம் ஆகிய இரண்டு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இரு பள்ளிகளும் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருப்பதால், குவாலா சிலாங்கூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் (PPD) உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் (Ashrul Riezal Asbar) கூறுகையில், 13 தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றார்.

தீயணைப்பு வீரர்கள் சுற்றுப்புறங்களை முழுமையாகச் சோதனை செய்து, தீ மீண்டும் பரவக்கூடிய அபாயம் இல்லை என்பதை உறுதி செய்தனர். பிற்பகல் 1.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், பிற்பகல் 3 மணிக்கு மீட்புப் பணி முழுமையாக நிறைவடைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!