Latestமலேசியா

சிவில் வழக்கில் பிரதமருக்கு சட்டப் பாதுகாப்பு உண்டா என்பது தொடர்பில் மேல்முறையீட்டை மீட்டார் அன்வார்

புத்ராஜெயா, மார்ச்-4-சிவில் வழக்குகளில் பிரதமருக்கு சட்டப் பாதுகாப்பு உண்டா என்ற 8 அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்துக்கு அனுப்பும் முயற்சித் தொடர்பான மேல்முறையீட்டை, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திரும்பப் பெற்றுள்ளார்.

தமது 8 கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்துக்கு அனுப்ப மறுத்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அன்வார் அந்த மேல்முறையீட்டை செய்திருந்தார்.

அவரின் முன்னாள் உதவியாளர் முஹமட் யூசோஃப் ராவுத்தர் 4 ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த பாலியல் வழக்குடன் இது தொடர்புடையதாகும்.

இந்நிலையில் அதனை மீட்டுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அன்வாரின் மேல்முறையீட்டை செலவுத் தொகையுடன் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அதாவது யூசோஃப் ராவுத்தருக்கு ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் RM50,000 செலவுத் தொகையை அவர் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!