பட்டவொர்த், செப்டம்பர் -18, பினாங்கில் சீன கோவிலொன்றில் நடைபெற்ற சமய விழாவைக் காட்டும் வீடியோவின் பின்னணி இசையாக நபிகள் நாயகத்தின் செலாவத்தை (selawat) சேர்த்து, அது டிக் டோக்கில் பதிவேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், போலீஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
@AhChong60 என்ற டிக் டோக் பக்கத்தில் 20 வினாடி அவ்வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது நேற்று காலை கண்டறியப்பட்டது.
இதையடுத்து குற்றவியல் சட்டம் மற்றும் 1998 தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
பினாங்கு போலீஸ் தலைவர் Datuk Hamzah Ahmad அதனை உறுதிப்படுத்தினார்.
வைரலான வீடியோ டிக் டோக்கிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.