சுங்கை பெர்ணம், ஜனவரி-21, சிலாங்கூர், சுங்கை பெசாரில் உடல் முழுவதையும் வெள்ளை பேண்டேஜ் துணியால் சுற்றிக் கொண்டு, ஓர் ‘உருவம்’ சாலையில் நடமாடிய வீடியோ வைரலாகி கவனத்தை ஈர்த்தது.
இரு கைகளையும் குறுக்கு வாட்டில் நெஞ்சில் வைத்தவாறு சாலையின் நடுவே அந்த உருவம் நடந்துசென்றதால், வாகனமோட்டிகள் திகைத்து நின்றனர்.
வீடியோ வைரலாக, அது ‘பேய் நடமாட்டமா’ என வலைத்தளவாசிகளும் பேசிக் கொண்டனர்.
பேண்டேஜை சுற்றிய விதத்தைப் பார்க்க, விபத்தில் மோசமாக காயமேற்பட்டு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பவர் போலும் இருந்தது.
இந்நிலையில், தவலறிந்த போலீஸ் ‘வெள்ளைப் பேயாக’ நடமாடியவரைக் கைதுச் செய்தது.
25 வயது அவ்வாடவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
குடும்ப உறுப்பினரின் உதவியுடன் அவர் சபா பெர்ணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.