
கோலாலம்பூர், பிப் 14 – இளம் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த சிவாவின் கை வண்ணத்தில் மலர்ந்த ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ கவிதை தொகுப்பு நூல் மிக சிறப்பாக வெளியீடு காணவிருக்கின்றது.
தமது 14 வயதிலிருந்து கவிதைத் துறையில் வலம் வரும் இவர் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமது தேர்ந்தெடுத்த கவிதைகளைத் தொகுத்து வெளியிடுகிறார்.
பல்வேறு பாடுபொருள்களை உட்படுத்தியிருந்தாலும்
‘காற்று வெளியிடை கண்ணம்மா’ எனும் தலைப்புக்கு ஏற்றபடி தேன் சொட்டும் காதல் உணர்வே இத்தொகுப்பின் மையப் புள்ளியாகத் திகழ்கிறது.
இக்கவிதைத் தொகுப்பு நாளை பிப்ரவரி 15ஆம்தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் தலைநகர் நேதாஜி மண்டபத்தில் வெளியீடு காணவுள்ளது.
இக்கவிதைத் தொகுப்பினை ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ டாக்டர் எம். சரவணன் சிறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருக்கிறார்.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு, தமிழை நேசிக்கும் அன்பு உறவுகள் அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பித்து ஆசியும் ஆதரவும் வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களில் சிவா அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.