Latestமலேசியா

சுற்றுப் பயணிகள் கூடும் இடங்களில் சுற்றித் திரியும் சட்டவிரோத புகைப்படக்காரர்களில் மேலும் 25 பேர் கைது

கோலாலம்பூர், மார்ச் 25 – பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் மற்றும் KLCC சுற்றி நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மேலும் 25 ‘சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூரில் சட்டவிரோத அல்லது அனுமதியற்ற புகைப்படக்காரர்களைக் கொண்ட குழுவினர் குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிள் சட்டவிரோத நடவடிக்கைகள் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சஷ்லி அடாம் தெரிவித்தார் .

சட்டவிரோத புகைப்படக்காரர்களால் உருவாகும் தேவையற்ற பிரச்சனைகள் பரவுவதை தடுப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் குழுவினர் தொடர் கண்காணிப்பை மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்பதால், அனைத்து சட்டவிரோத புகைப்படக்காரர்களும் தங்களது செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என போலீஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக இன்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திதல் நடைபெற்ற ‘செய்தியாளர் சந்திப்பில் சஷ்லி அடாம் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!