
கோலாலம்பூர், நவம்பர்-10,
தமிழ்க் கல்வியின் உலகளாவிய மேடையாக 2026-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 5 வரை, சென்னை அண்ணா நூலகத்தில் 4-ஆவது புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டை உலகத் தமிழ்க் கல்விக் கழகம் நடத்துகிறது.
முன்னதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட இம்மாநாடு, இம்முறை அதிகமான கல்வியாளர்கள் பங்கேற்கும் வகையில் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
AI, தொழில்நுட்பம், மற்றும் மொழிக் கற்பித்தலில் புதிய யுக்திகள் ஆகியவை மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்குமென, உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வெற்றி செல்வி தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து 30 பேர் கொண்ட கல்வியாளர் குழு பங்கேற்கவிருப்பதாக, மலேசியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முத்து நெடுமாறன் கூறினார்.
பேராளர் குழுவுக்கு பேராசிரியர் என்.எஸ். இராஜேந்திரன் தலைமையேற்கிறார்.
கண்காட்சிகள், ஆய்வுக் கட்டுரைகள், பயிற்சிப் பட்டறைகள், மாணவர் நிகழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன.
தமிழ் கற்பித்தலில் புதிய பாதைகளை உருவாக்கும் இந்த மாநாடு, உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.



