Latestமலேசியா

செலாயாங்கில் களைகட்டிய அடிதடா சிலம்பப் போட்டி; திறமையை வெளிப்படுத்திய 150 மாணவர்கள்

கோலாலம்பூர், அக்டோபர் 5 – கூட்டரசுப் பிரதேச அடிதடா கழகம் ஏற்பாடு செய்த Pertandingan Adithada W.P. Kuala Lumpur 2026 சிலம்பப் போட்டி, நேற்று சிலாங்கூர், செலாயாங்கிலுள்ள 168 Park Mall-இல் நடைபெற்றது.

இளம் தலைமுறையினரிடையே பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை ஊக்குவிப்பதுடன், மாணவர்கள் தங்களின் திறமை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.

பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியின் முடிவில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கு 30 தங்கம், 30 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 90 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டி, கூட்டரசுப் பிரதேச அடிதடா கழகத்தின் புதிய முயற்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகத்தில் நடத்தப்பட்டதாக கூட்டரசு பிரதேச அடிதடா கழகத்தின் தலைவர் தேவா தெரிவித்தார்.

தேவா தலைமையில் அவரது குழுவினரால் போட்டிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மகாகுரு வினோத் மற்றும் மகாகுரு பாலு உள்ளிட்ட சிலம்பக் கலை பயிற்றுநர்களின் வழிகாட்டுதலிலும் போட்டி நடைபெற்றது.

இளம் தலைமுறையினரிடையே சிலம்பம் குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் அதிகரிப்பதுடன், பாரம்பரிய தற்காப்புக் கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதே இத்தகைய முயற்சிகளின் நோக்கம் என மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் எம்.சுரேஷ் தெரிவித்தார்.

இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இளம் தலைமுறையினரிடம் சிலம்பக் கலையைக் கொண்டு சேர்த்து, அதன் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இப்போட்டி, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் சிறந்த களமாக அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!