சௌகிட் ‘ஆரோக்கிய மையத்தில்’ கைதான முஸ்லீம்களிடம் JAWI வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், டிசம்பர்-2,
கோலாலம்பூர் சௌகிட்டில் ‘spa & sauna’ புத்துணர்ச்சி மையத்தில் கைதான 200-க்கும் மேற்பட்டோரில் முஸ்லீம்களின் வாக்குமூலங்களை, கூட்டரசு இஸ்லாமிய சமயத் துறையான JAWI பதிவுச் செய்துள்ளது.
1997-ஆம் ஆண்டு ஷாரியா குற்றங்களுக்கான சட்டத்தின் கீழ், ஓரினச் சேர்க்கை, பொது இடங்களில் ஒழுங்கீனம், குற்ற முயற்சி எனும் பிரிவுகளின் அடிப்படையில் JAWI விசாரணை நடத்துகிறது.
அச்சோதனையில் மருத்துவர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 17 அரசு ஊழியர்களும் கைதுச் செய்யப்பட்டனர்.
ஆனால், போலீஸார் தாமதமாக தடுப்புப் காவல் ஆணைக்கு விண்ணப்பித்ததால், நீதிமன்றத்தால் அது நிராகரிக்கப்பட்டு 171 பேர் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் ஷாரியா மதச்சட்டத்தின் கீழ் JAWI தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுபோன்ற இயற்கைக்கு முரணான கலாச்சாரத்தை அனுமதித்தால் எதிர்கால தலைமுறையே வீணாகி விடுமென இஸ்லாமிய சமய விவகார அமைச்சர் டத்தோ நாயிம் மொக்தார் கூறியிருந்தார்.



