Latestமலேசியா

ஜாலான் கிளாங் லாமாவில் சாலையினெ எதிர்புறமாக வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 3 நாள் சிறை, RM6,000 அபராதம்

கோலாலம்பூர், ஏப் 5 -கோலாலம்பூரில் உள்ள Jalan Klang Lamaவில் போக்குவரத்து எதிர் திசையில் வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநர் வொங் கொக் கோங் (Wong Kok Kong), அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு மூன்று நாட்கள் சிறைத்தண்டனையும் 6,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42 (1) ஆவது பிரிவின் கீழ் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று மாஜிஸ்திரேட் டிஜி சியாஸ்வானி யாஸ்மின் துவான் ரோஸ்லான்(  Tg Syazwany Yasmyn Tuan Roslan  ) Wongகிற்கு இந்த தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

அதோடு அவரது ஓட்டுநர் உரிமமும் ஐந்து ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது. 32 வயதுடைய Wong தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தினார்.

Jalan Klang Lama / Jalan Sepadu சந்திப்பிலிருந்து Jalan Kuchai Lama சந்திப்பு வரை, ஒரு கார் போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக ஓட்டப்படுவதைக் காட்டும் பரவலாகப் பகிரப்பட்ட காணொளியிலிருந்து இந்த வழக்கு உருவானது.

ஜாலான் கிளாங் லாமா சாலையில் போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டியபோது , போலீஸ் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன் நேற்றிரவு மணி 8.35க்கு சரணடைந்தார் என கோலாலம்பூர் போக்குவரத்து அவர் சரணடைந்ததாக புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் உதவி கமிஷனர் Mohd Zamzuri Mohd Isa இதற்கு முன் தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!