
மார்ச்-26-20 வயதுடைய பெண் ஒருவர் சாலையை கடந்தபோது பிற்பகல் மணி 2.45 அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத்துறையின் தலைவர் உதவிக் கமிஷனர் முகமட் சம்சுரி முகமட் இசா( Mohd Zamsuri Mohd Isa ) தெரிவித்தார்.
பாதசாரிக்கான வழியை பயன்படுத்தாமல் அந்த பெண் கை தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையின் இடதுபுறத்திலிருந்து வலது புறம் கடந்தபோது 31 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி அவரை மோதியதோடு சாலை எச்சரிக்கை விளக்கு பகுதியில் நின்றுகொண்டிருந்த Toyota Vellfire MPV மற்றும் ஒரு லோரியையும் மோதினார்.
இந்த சம்பவத்தில் பாதசாரியும் மோட்டார் சைக்கிளோட்டியும் சொற்ப அளவில் காயம் அடைந்ததைத்த தொடர்ந்து மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர்.
45 வயதுடைய MPV ஓட்டுநரும் 46 வயதுடைய லோரி ஓட்டுநரும் இவ்விபத்தில் காயம் அடையவில்லை.
முகநூலில் வைரலான இந்தச் சம்பவத்தின் காணொளிப் பதிவையும் போலீஸ் துறை கவனத்தில் எடுத்துக் கொண்டதோடு , 1959 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் 45 ஆவது விதி மற்றும் தண்டனைச் சட்டத்தின் 337ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்திவருவதாக முகமட் சம்சுரி கூறினார்.



