
ஜெர்மனி, ஜூலை 28 – நேற்று, தென்மேற்கு ஜெர்மனியில் பயணம் செய்துக்கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான அந்த ரயிலில் சுமார் 100 பயணிகள் இருந்தனர் என்றும் அவர்களில் 50 பேர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கு அதிகாரிகள் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுமார் 40 கிலோமீட்டர் நீளத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அறியப்படுகின்றது.
அதே நேரத்தில் இந்த விபத்துக்கு நிலச்சரிவு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஜெர்மன் ஊடகங்கள் கணித்துள்ள போதும், ரயில் சேவையின் தொழில்நுட்ப சிக்களும் இந்த விபத்துக்கு காரணமாயிருக்கலாம் என்று பொதுமக்கள் வலைத்தளத்தில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.