Latestமலேசியா

ஜோகூரில் புதிய தொழில்முனைவர்களை கௌரவித்த RD Esha UEA 2026 விருது விழா

கூலாய், மார்ச்-2-RD Esha Holding Sdn Bhd நிறுவனத்தின் ஏற்பாட்டில், RD Esha Upcoming Entrepreneurs Award (UEA) 2026 விருது விழா, பிப்ரவரி 28-ஆம் தேதி ஜோகூர், பண்டார் புத்ரா கூலாய், De Fortune உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சமூக முன்னேற்றத்திற்கு பங்களித்து வரும் தொழில்முனைவோர்களின் உழைப்பையும் சாதனைகளையும் பாராட்டி, அவர்களை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு GM Aravind Deco மற்றும் Arabinaya Enterprise Lady Boss நிறுவனங்கள் ஆதரவளித்தன.

சிறப்பு விருந்தினர்களாக Dato Duta Dr. A. Chandran, Dato Then Arasoo Subbiah, Madam Sailajah Selveekam, Dr. Shankara Pillai M.D, Dato Puvaneswaran Naedunchellian @ Dato Sathya, Mr. Prakash Kumar மற்றும் Madam Akeem Mariamah ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த விருது விழாவானது தமது நீண்ட நாள் கனவு என, ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் RD Esha Holding நிறுவனருமான தனலெட்சுமி என். சுப்ரமணியம் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

“எங்களுக்கும் விருது வாங்க ஒரு மேடை கிடைக்காதா?” என ஏங்குவோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்வதன் மூலம் தமக்கு ஆத்ம திருப்தி ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தமாக 35 தொழில்முனைவர்கள் மற்றும் RD Esha நிறுவனத்தின் 5 உறுப்பினர்கள் என 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுப் பெற்ற முக்கியப் பிரமுகர்கள் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் Mr. Murugan, Mrs. Ponnie D’ya, Mr. George ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும், மலேசிய கலைஞர் OG Nanba-வின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதோடு 20 பேருக்கு அதிர்ஷ்ட குலுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மொத்தத்தில், RD Esha Upcoming Entrepreneurs Award 2026 விழா, புதிய தொழில்முனைவோர்களை முன்னேற்றுவதிலும், அவர்களின் முயற்சிகளை பாராட்டுவதிலும், RD Esha Holding Sdn Bhd நிறுவனத்தின் உறுதியான கடப்பாட்டை வெளிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!