
ஜோகூர் பாரு, ஜூன் 17 – ஜோகூர் மாநிலம் முழுவதிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சியை மாநில ம.இ.கா சமயப் பிரிவு முன்னெடுக்கும் என ஜோகூர் ம.இ.கா தலைவரும் , ஆட்சிக் குழு உறுப்பினருமான ரவின்குமார் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
இந்த நடவடிவக்கையின் மூலம் இந்துக்கள் வெள்ளிக்கிழமைதோறும் ஆலயம் செல்லும் சூழ்நிலையை ஏற்படுத்தும் அதே வேளையில் இந்துக்களே ஒன்றிணைவோம் என்ற முழக்கத்தோடு சமய சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைய முடியும்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் இம்மாதிரியான சமய சொற்பொழிவு நடத்த மாநில சமயப் பிரிவை பணித்திருப்பதாகவும், வெள்ளி தோறும் இந்துக்களே ஒன்றிணைவோம் என்ற முழக்கத்தோடு இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என ரவின்குமார் தெரிவித்தார்.
ம.இ.கா ஜொகூர் மாநில சமயப் பிரிவு, மஇகா ஜொகூர் பாரு தொகுதி, மாநில இந்து சங்கம், , ஜொகூர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஜொகூர் இராஜ மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்துக்களே ஒன்றிணைவோம் என்ற சமய சொற்பொழிவை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபோது ரவின்குமார் இத்தகவலை வெளியிட்டார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய ஜொகூர் மாநில மஇகா சமயப் பிரிவு தலைவர் தொண்டர்மணி க.சேகரன் இத்திட்டத்தை ஜொகூர் மாநில தாய் கோவிலாகிய இராஜ மாரியம்மன் ஆலயத்திலிருந்து தொடங்க வாய்ப்பளித்த ஆலயத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். டாக்டர்.
மகேந்திர சுவாமி குருக்கள் இந்து சமய பெருமைகளை பட்டியலிட்டு இரண்டு மணி நேரம் எழுச்சியுரை ஆற்றினார். இந்த நிகழ்வில் மஇகா தேசிய மகளிர் பகுதி தலைவி சரஸ்வதி, மஇகா மாநில துணைத் தலைவர் நிலாராஜா, அருள்மிகு இராஜமாரியம்மன் ஆலய தலைவர் டத்தோ டாக்டர் மோகன் , மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநில பொருளாளர் சங்கபூசன் கருப்பையா, மஇகா ஜொகூர் பாரு தொகுதி தலைவர் ஜெயசீலன் மற்றும் அவர்தம் உறுப்பினர்கள், இஸ்கண்டார் புத்ரி மஇகா தொகுதி தலைவர்கள், கிளைத் தலைவர்கள், ஜொகூர் மாவட்ட கல்வி அதிகாரி திரு ரவிசந்திரன், மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநில உறுப்பினர்கள், ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழக உறுப்பினர்கள் உட்பட சுற்று வட்டார மெய்யன்பர்களும் திரளாக கலந்துகொண்டனர்.