
ஜோகூர் பாரு, ஜூலை-7 – Dato’ Haji Asman Shah Abdul Rahman ஜோகூர் மாநில அரசாங்கத்தின் புதியச் செயலாளராக பதவியேற்றுள்ளார்.
Istana Bukit Serene அரண்மனையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், ஜோகூர் இடைக்கால சுல்தான் Tunku Mahkota Ismail, Asmanனுக்கு பதவி உறுதிமொழி கடிதத்தையும் விசுவாச உறுதி பத்திரத்தையும் வழங்கினார்.
அந்நிகழ்வில் மந்திரி பெசார் Dato’ Onn Hafiz bin Ghazi , ஜோகூர் அரச மன்றத்தின் தலைவர் Dato’ Dr. Abdul Rahim Ramli உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜூலை 1 முதல் தேசிய அரண்மனையான இஸ்தானா நெகாராவுக்கு Datuk Pengelola Bijaya-வாக பணிமாறிச் சென்ற Tan Sri Dr Azmi Rohaniக்குப் பதிலாக, டத்தோ Asman Shah இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
இவர் கடந்தாண்டு அக்டோபர் 1 முதல் ஜோகூர் மாநில அரசின் துணைச் செயலாளராக இருந்து வந்தார்.
இதற்கு முன் Pasir Gudang மாநகர மன்றத்தின் தலைவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.