Latestமலேசியா

தஞ்சோங் டாவாய் தீ விபத்து; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் 80,000 ரிங்கிட் நிதியுதவி

சுங்கை பட்டாணி, ஜனவரி-12, கெடா, சுங்கை பட்டாணி, தஞ்சோங் டாவாயில் உள்ள மீனவ கிராமத்தில் கடந்த வாரமேற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

அவர்களில் ஒருவர் கடும் தீப்புண் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த பிரதமரின் சிறப்பு விவகாரங்களுக்கான அதிகாரி ஷண்முகம் மூக்கன் உடனடியாகக் களத்திலிறங்கி நிலவரத்தைக் கண்டறிந்தார்.

MPN மாநில உதவித் தலைவர் வி.ஆறுமுகமும் அவருடன் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையானவற்றை கண்டறிந்து ஷண்முகம் அறிக்கையளித்தார்.

இதையடுத்து அரசாங்கம் பிரதமரின் சிறப்பு ஒதுக்கீடாக 80,000 ரிங்கிட்டை அறிவித்தது.

பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு,
நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் Muhammad Kamil Abdul Munim அதனை நேரில் வழங்கினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.

அவர்களில் 14 குடும்பங்களின் வீடுகள் தீயில் முற்றாக அழிந்த நிலையில், மேலுமிரு குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.

அவர்கள் அனைவரும்
தஞ்சோங் டாவாய், ச்சூங் ச்செங் சீனப் பள்ளி மண்டபத்திலுள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து பிரதமர் அதிக அக்கறைக் காட்டியதாகவும், அவர்களின் துயர் தீர்க்க இந்த சிறிய நிதியுதவி துணைப் புரியுமென்றும் Kamil கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!