Latestமலேசியா

தாய்லாந்திற்கு செல்லும் மலேசியர்கள் கருப்பு, வெள்ளை மற்றும் கருநிற உடைகளை மட்டுமே அணியும்படி வலியுறுத்து

கோத்தா பாரு, அக்டோபர் -27 ,

தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன்
அவர்களின் தாயார் ராணி சிரிகிட்  காலாமானதை தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்நாட்டிற்கு செல்லும் மலேசியர்கள் கருப்பு, வெள்ளை அல்லது பிற கருநிற உடைகள் மட்டுமே அணியும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். தேசிய துக்க அனுசரிப்பு காலத்தில் அதற்கு பொருத்தமான உடைகளை அணிந்துசெல்லும் நடவடிக்கையை தாய்லாந்து மக்கள் பாராட்டுவார்கள் என தாய்லாந்து தென்கிழக்கு ஆசிய சங்கத்தின் ஹலால் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கான தலைவர்
அய்டா ஒயுஜே  தெரிவித்தார். சுற்றுலாவுக்காக தாய்லாந்திற்கு வரும் மலேசியர்கள், முடிந்தால், மரியாதை செலுத்தும் அடையாளமாக கருப்பு, வெள்ளை அல்லது கரு நிறங்களைக் கொண்ட உடைகளை அணியும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தகைய உடைகள் சிந்தனைமிக்கதாகவும் மரியாதைக்குரியதாகவும் தாய்லாந்து மக்களால் கருதப்படுகின்றன.

அரசு அதிகாரிகள் துக்க ஆடை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அது பொதுமக்களுக்கு கட்டாயமில்லை. தேசிய துக்க நெறிமுறைகளின் ஒரு பகுதியாக, தாய்லாந்து 30 நாட்களுக்கு அதன் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்று மாதங்களுக்கு துக்க உடை பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும். ராணியின் நல்லுடலுக்கு அரச அரண்மனையில் அஞ்சலி செலுத்தத் திட்டமிடும் பார்வையாளர்கள், மரியாதைக்குரிய அடையாளமாக, சூட் ஜாக்கெட்டுடன் கூடிய முறையான கருப்பு அல்லது வெள்ளை ஆடைகளை அணிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!