
பேங்கோக், ஜூன்-2–தாய்லாந்தில் தற்போது அதிகமாக பரவி வரும் NB.1.8.1 என்ற COVID-19 துணை வகை, கடுமையான நோயறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த வகை தற்போது தாய்லாந்தில் அதிகம் பரவி வரும் COVID-19 வகையாக இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன.
மேலும், பெரிய அளவிலான தொற்று குழுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தொடர்ந்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 23 வரை தாய்லாந்தில் 3,642 COVID-19 தொற்றுகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளன.
அவற்றில் 50.95 விழுக்காடு தொற்றுகள் NB.1.8.1 வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



