
தாய்லாந்து பள்ளி துப்பாக்கிச்சூடு: பள்ளி முதல்வர் பலி
கோலாலம்பூர், பிப்ரவரி-14,
தென் தாய்லாந்தில் உள்ள பள்ளியொன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பள்ளி முதல்வர் உயிரிழந்துள்ளார்.
Hat Yai நகரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 18 வயது இளைஞர் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதாக போலீஸார் கூறினர்.
பள்ளி முதல்வர் படுகாயம் அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
மேலும் 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திலேயே சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டார்.
துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது மற்றும் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்துயர சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் பெற்றோர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு உரிய ஆலோசகச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.



