Latestமலேசியா

திதி காஜா பகுதியில் ஒருவர் மற்றொருவரால் கீழே விழும் வரை தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி வைரல்

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் ஒரு பகுதியில் , ஒருவர் மற்றொருவரால் தாக்கப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு நிமிடம், 22 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், சந்தேக நபர் பல ஆண்களுடன் அந்த இடத்தில் இருந்து, பாதிக்கப்பட்டவரை கீழே விழும் வரை தாக்குவதை அதில் காண முடிகிறது.

இச்சம்பவம் குறித்து புகார் பெற்றுள்ளதை கோத்தா ஸ்டார் மாவட்ட
போலீஸ் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சைட் பஸ்ரி சையத் அலி
(Syed Basri Syed Ali ) உறுதிப்படுத்தினார்.

ஏப்ரல் 20 ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில், திதி காஜா (Titi Gajah) பகுதியில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு முன்பாக இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக , புகார்தாரரான 38 வயது நபருக்கும் சந்தேக நபரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமராவை பரிசோதித்ததில் , 41 வயது சந்தேக நபர், புகார்தாரரை அவரது வீட்டின் முன்பாகக் கீழே விழும் வரை குத்தியிருகிறார்.

தாக்குதலுக்கு உள்ளானவர் தலையில் உள் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர், இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும்படி பாதிக்கப்பட்ட நபருக்கு வலியுறுத்தினார்.

வாந்தி மற்றும் தலைச்சுற்றல் காரணமாக சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு (HSB) கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதோடு , அவருக்கு வலிப்பு நோய்க்கான மருந்துகள் வழங்கப்பட்டு, கண்காணிப்பிற்காக அந்தப் பிரிவில் தங்கவைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!