
ஈப்போ, ஜூலை 10 – ஈப்போ, ஜூலை 10 – நேற்றிரவு, ஜெலாப்பாங் ஜலான் கிள்ளாங் 2, தொழிற்சாலை பகுதியிலிருக்கும் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு 75 சதவீதம் சேதமடைந்துள்ளதென்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர், சபரோசி நோர் அகமது கூறியுள்ளார்.
தொழிற்சாலைப் பகுதியில் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் தொட்டியும், மொத்தம் 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு அம்மோனியா தொட்டிகளும் முழுவதுமாக எரிந்துள்ளன என்று தொழிற்சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை குறிப்பிட்ட நேரத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்றும் அம்மோனியா சேமிப்பு தொட்டியின் பிரதான வால்வு வெற்றிகரமாக மூடப்பட்டுள்ளது என்றும் அறியப்படுகின்றது.
தற்போது அமோனியா அளவு குறைந்திருப்பதோடு மேலும் அபாயகரமான பொருட்களின் கண்காணிப்பு இன்னும் மேற்கொள்ளப்படுகின்றது என்று சபரோசி குறிப்பிட்டுள்ளார்.